முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மீராசாஹிபு அப்துல் மஜீட் அவர்கள் இன்று (30) காலமானார்.

அன்னாரது ஜனாஸா தற்போது 201, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு – 05 இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்னார் தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் துறையிலும், பொலிஸ் சேவையிலும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்கள் பணியாற்றிய ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்தார்.

குறிப்பாக, 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் பயங்கரவாத வன்முறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட துயரமான காலகட்டத்தில், மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும் உதவிகளும் சமூகத்தால் என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூரத்தக்கவை.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்புப் அச்சுறுத்தல் இருந்த காலகட்டத்தில் தனது பதவியை துச்சமாக மதித்து செயற்பட்டதனால், 90 காலப்பகுதியில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் ஓர் கதாநாயகனாக தென்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.

அப்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் இவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக ஐக்கிய தேசிய கட்சியினால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பின்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்துகொண்டதுடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினராக மக்களினால் தெரிவானார். இலங்கையின் தேசிய ரக்பி அணியின் தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகப் பொறுப்புணர்வுடனும், மனிதாபிமானக் கண்ணோட்டத்துடனும் அவர் ஆற்றிய சேவைகள் மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்.

அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரை நேசித்த மக்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மேலும், அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இப்பேரிழப்பைத் தாங்கும் மனப்பக்குவத்தையும் அழகிய பொறுமையையும் வழங்கியருள்வானாக. ஆமீன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...

Colombo Marathon போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் Colombo...

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

இன்றையதினம் (30) நாட்டின் மேல் , சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி,...