அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சர்வதேச மட்டத்தில் சைவநெறிக்கூடம் அவசர வேண்டுகோள்

Date:

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான  அனோஜன் சிவராசா அவர்கள் சவூதி அரேபியாவில் எதிர்கொண்டு வரும் மிகக் கடுமையான சட்டச் சூழ்நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

திரு. அனோஜன் சிவராசா அவர்களுக்கு உயிர் ஒறுப்பு (மரண தண்டனை) விதிக்கப்படும் நேரிடர் (அபாயம்) இருப்பதாகக் கிடைத்துள்ள தகவல்களைத் தொடர்ந்து, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உடனடியாகவும் உயர் மட்டத்திலும் தலையிட்டு, சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் தொடர்புடைய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள சைவநெறிக்கூடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்துவது எமது நோக்கம் அல்ல. குறிப்பாக இஸ்லாம் மதத்தையும் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளையும் நாம் மதிக்கின்றோம். அதேவேளை, ஒரு மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்பதையும், தனது தவறை உணர்ந்து உள்ளம் வருந்தி, வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் சைவநெறிக்கூடம் வலியுறுத்துகிறது.

ஊடகங்கள் வாயிலாக திரு. அனோஜன் சிவராசா அவர்கள் தனது செயலுக்காக உள்ளத்தில இருந்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், தான் செய்த தவறை உணர்ந்து தனது வாழ்க்கையை நேர்மையான முறையில் தொடர விரும்புவதாகவும் அறிகின்றோம்.

சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள சவூதி தூதரகம் ஊடாக சவூதி மன்னர் அவர்களிடமும், சுவிசில் பேர்னில் அமைந்துள்ள இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமரிடமும் மற்றும் இலங்கை சனாதிபதி செயலகம் ஊடாக இலங்கை சனாதிபதியிடமும் மேலும் சவூதி அரசரின் பல்சமய அறக்கட்டளை அமைப்பான „ கசித் (KACID)“ ஊடாக, சவூதி  அரசிடமும் திரு. அனோஜன் அவர்களின் உயிரைக் காக்க சைவநெறிக்கூடத்தால் வேண்டுகை விடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உயிர் ஒறுப்புத் தண்டனை (மரண தண்டனை) தவிர்க்கப்படுவதற்கான அனைத்து சட்டபூர்வமான மற்றும் நடைமுறை வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். மாந்தர் பேரன்பு அடிப்படையில் அவரது தண்டனையை குறைப்பதற்கும், இயன்றால் அவரை விடுதலை செய்து இலங்கைக்கு திரும்புவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகையில் குறிக்கப்பட்டுள்ளது.

சைவநெறிக்கூடம் மேலும் தெரிவிப்பதாவது:

இந்த வேண்டுகோள் எந்தவொரு அரசியல் நோக்கத்துடனும் முன்வைக்கப்படவில்லை. ஒரு மனித உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனும் ஆழமான மாந்தர் அன்பு உணர்விலிருந்தே சைவநெறிக்கூடம் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றது.

சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு, இலங்கை அரசு இவ் வழக்குத் தொடர்பில் உடனடியாகவும் நெகிழ்வின்றித் தொடர்ந்து செயல்பட்டு, அனோஜன் சிவராசா அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து செயல்களையும் ஆற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் சைவநெறிக்கூடம் தனது நன்றியையும் இணக்க – இசைவினையும் தெரிவித்துக்கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகள்

"கல்வி என்பது நீங்கள் உலகத்தை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்"...

அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

நாட்டின் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எவ்வித பரவலான பற்றாக்குறையும் நிலவவில்லை என...

புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நடந்த ‘Open Day 2026’!

புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘Open Day 2026’ வழிகாட்டல் மற்றும்...

இலங்கை பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது

தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு...