இந்திய பாஜக தலைவர்களுடன் ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சந்திப்பு: இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை

Date:

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தூதுக்குழுவினர், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பி. எல். சந்தோஷ் (B. L. Santhosh) அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான இந்த தூதுக்குழுவினருடனான சந்திப்பு கடந்த திங்கள்கிழமை (28) நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, பாஜகவின் வரலாறு, கட்சியின் கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மட்டம் வரை உறுப்பினர்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து ஜே.வி.பி தூதுக்குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டின் வளர்ச்சிக்காக அமல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜே.வி.பி மற்றும் பாஜக இடையே பரஸ்பர புரிதலையும் நட்பையும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, பாஜகவின் மகளிர் அணியின் தேசியத் தலைவி ரூப்குமாரி சௌத்ரியையும் ஜே.வி.பி தூதுக்குழுவினர் சந்தித்தனர். மேலும், பாஜகவின் இளைஞர் அணியின் பிரதிநிதிகளான வினீத் வாட்ஸ் தியாகிமற்றும் பக்தி சர்மாஆகியோருடனும் தனியாகக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...

ஞானசார தேரருக்கு எதிராக மீண்டும் பிடியாணை உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது...

முதல் முயற்சியிலேயே தேசிய உற்பத்தித்திறன் விருதை வென்று சாதனை படைத்தது Eastern Cancer Care Hospice.

தேசிய உற்பத்தித்திறன் விருது (National Productivity Award) போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற...