உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு நாளை

Date:

உயர் நீதிமன்றின் மூவரடங்கிய விசேட நீதிபதி குழாம் முன்னிலையில் நாளைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

இது நாட்டின் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த தீர்ப்புகளின் ஒன்றாக பார்க்கப்படவுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 577 பேர் தாக்குதல்களில் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 40 பேர் வெளிநாட்டவர்கள்.

தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 24 சந்தேக நபர்களுக்கு எதிராக 23270 குற்றங்கள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

7 வருடங்களுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கு விசாரணைகளில் அடையாளம் காணப்பட்ட 3000க்கும் அதிகமான சாட்சியங்களில் 547 சாட்சியங்கள் ஆராயப்பட்டதுடன் 2077 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன.

அவற்றில் டிஎன்ஏ அறிக்கைகள் அரச பகுப்பாய்வு அறிக்கைகள், நீதித்துறை மருத்துவ அதிகாரி அறிக்கைகள் என்பன உள்ளடங்குகின்றன.

வழக்கில் அரச தரப்பு சாட்சியங்களை விசாரிக்கும் செயற்பாடு கடந்த 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 2026 ஆகஸ்ட் மாதம் 13ம் திகதியே குறித்த விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.

இதற்கமைய இந்த விசாரணைகள் இரண்டரை வருடங்களையும் சுமார் 250 விசாரணை நாட்களையும் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை இலங்கை முகம்கொடுத்த மனித பேரழிவுகளில் இதுவொரு முக்கியமான பயங்கரவாத சம்பவமாக கருதப்படுகிறது. நாளைய தினம் வெளியாகவுள்ள தீர்ப்பு இலங்கை மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...

கூடுதல் சீட் பெல்ட்களைப் பொருத்திக்கொள்ள அனுமதி: புதிய விதிமுறை குறித்து போக்குவரத்து அமைச்சர் விளக்கம்.

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ஆசனப்பட்டை (Seat Belt) சட்டத்தின் கீழ், ஐந்து பேரடங்கிய...