சவூதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

Date:

துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வணிக ரீதியான விமானம், 180 பயணிகள் மற்றும் விமானக் குழுவினருக்குக் கடத்தல் அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல் குறித்த அச்சத்தை ஏற்படுத்திய எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் அவசரத் தரையிறக்கம் செய்தது.

விமானிகள் இடையே மோதல் நடந்ததாக வந்த தகவல்கள் மற்றும் கத்திக்குத்து காரணமாக ‘கொக்பிட்’ (விமானி அறை) பகுதியில் இரத்தம் சிந்தியிருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மத்தியில், ‘ஃப்ளைதுபாய்’ (flydubai) நிறுவனத்தின் FZ1073 விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இது விமானக் கடத்தல் அல்ல என்று இஸ்ரேலிய அரசு அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இருப்பினும், விமானி அறையில் நடந்த மோதலின் தன்மை குறித்து ஊடகங்களில் ஊகங்கள் எழுந்தன.

விமானம் முதலில் சர்வதேச அவசரநிலையைக் குறிக்கும் வகையில் 7700 என்ற ‘ஸ்க்வாக்’ குறியீட்டை வெளியிட்டதாகவும், பின்னர் கடத்தல் அல்லது சட்டவிரோதத் தலையீட்டைக் குறிக்கும் வகையில் அதை 7500 குறியீடாக மாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, இரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த அவசரநிலையைக் கண்காணிக்க அவசரக் கூட்டங்களை அழைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...

சிறுவர் பராமரிப்பும் அவர்களின் உரிமைகளும்; ஓர் இஸ்லாமிய பார்வை- சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரை.

இஸ்லாம் குழந்தைகளுக்குச் சிறப்பான கவனிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளது. அவர்கள் பிறந்த பிறகும்,...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள்...