உலக தடகள அல்டிமேட் செம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க இன்று காலை நாடு திரும்பினார்.
உலகிலுள்ள முன்னணி தடகள வீரர்கள் பங்கேற்கும் குறித்த தொடர் ஹங்கேரியின் புடாபஸ்ட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. குறித்த தொடரில் இடம்பெற்ற ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றார்.
