ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

Date:

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலகப் புகையிரதங்களும் தற்போது வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் ஊடகப் பேச்சாளரும், புகையிரதப் போக்குவரத்து அத்தியட்சகருமான அசங்க சமரசிங்க தெரிவிக்கையில், ஒரு புகையிரதத்தைத் தவிர ஏனைய அனைத்துப் புகையிரதங்களையும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்கங்கள் தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணிநேரத்திற்கு இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, நேற்றை தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பல ரயில் சேவைகள் முடங்கியதாக தெரிவித்தார்.

இதனால் பல பணியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் தமது கோரிக்கைகள் குறித்து உடன் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘இலங்கையர்களாக இணைந்து நிற்கிறோம்’; அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிற்கு சனத் ஜெயசூரிய கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதநேய...

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு மத்தியில் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள்,...

அனோஜன் வழக்கு: சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயார்; இலங்கை சட்டக் குழு தீவிரம்!

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் மூலம் மத அவமதிப்புச் செய்ததாகக் குற்றம்...

வெறுப்புணர்வுக்கு அங்கீகாரம்; நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியுமான...