அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம்: மக்கள் அவதானம்!

Date:

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (03ஆம் திகதி) நண்பகல் 12.09 அளவில் மாதம்பே, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புலமைப்பரிசில் பெறுபேறு : தேசிய ரீதியில் முதல் இடங்கள்!

2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, தமிழ் மொழி மூலமாக அதிகூடிய...

ஓகஸ்ட் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக்கு

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கி...

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...