அனோஜன் சிவராசா அவர்களின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சைவநெறிக்கூடம் விரைந்த வேண்டுகோள்

Date:

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான திரு. அனோஜன் சிவராசா அவர்கள் சவூதி அரேபியாவில் எதிர்கொண்டுவரும் மிகக் கடுமையான சட்டச் சூழ்நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

திரு. அனோஜன் சிவராசா அவர்களுக்கு உயிர் ஒறுப்பு (மரண தண்டனை) விதிக்கப்படும் நேரிடர் (அபாயம்) இருப்பதாகக் கிடைத்துள்ள தகவல்களைத் தொடர்ந்து, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உடனடியாகவும் உயர் மட்டத்திலும் தலையிட்டு, சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் தொடர்புடைய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள சைவநெறிக்கூடம் வேண்டுகை விடுத்துள்ளது.

எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்துவது எமது நோக்கம் அல்ல. குறிப்பாக இஸ்லாம் மதத்தையும் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளையும் நாம் மதிக்கின்றோம். அதேவேளை, ஒரு மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்பதையும், தனது தவறை உணர்ந்து உள்ளம் வருந்தி, வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் சைவநெறிக்கூடம் வலியுறுத்துகிறது.

ஊடகங்கள் வாயிலாக திரு. அனோஜன் சிவராசா அவர்கள் தனது செயலுக்காக உள்ளத்தில இருந்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், தான் செய்த தவறை உணர்ந்து தனது வாழ்க்கையை நேர்மையான முறையில் தொடர விரும்புவதாகவும் அறிகின்றோம்.

சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள சவூதி தூதரகம் ஊடாக சவூதி மன்னர் அவர்களிடமும், சுவிசில் பேர்னில் அமைந்துள்ள இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமரிடமும் மற்றும் இலங்கை சனாதிபதி செயலகம் ஊடாக இலங்கை சனாதிபதியிடமும் மேலும் சவூதி அரசரின் பல்சமய அறக்கட்டளை அமைப்பான „ கசித் (KACID)“ ஊடாக, சவூதி  அரசிடமும் திரு. அனோஜன் அவர்களின் உயிரைக் காக்க சைவநெறிக்கூடத்தால் வேண்டுகை விடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உயிர் ஒறுப்புத் தண்டனை (மரண தண்டனை) தவிர்க்கப்படுவதற்கான அனைத்து சட்டபூர்வமான மற்றும் நடைமுறை வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். மாந்தர் பேரன்பு அடிப்படையில் அவரது தண்டனையை குறைப்பதற்கும், இயன்றால் அவரை விடுதலை செய்து இலங்கைக்கு திரும்புவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகையில் குறிக்கப்பட்டுள்ளது.

சைவநெறிக்கூடம் மேலும் தெரிவிப்பதாவது:

இந்த வேண்டுகோள் எந்தவொரு அரசியல் நோக்கத்துடனும் முன்வைக்கப்படவில்லை. ஒரு மனித உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனும் ஆழமான மாந்தர் அன்பு உணர்விலிருந்தே சைவநெறிக்கூடம் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றது.

சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு, இலங்கை அரசு இவ் வழக்குத் தொடர்பில் உடனடியாகவும் நெகிழ்வின்றித் தொடர்ந்து செயல்பட்டு, அனோஜன் சிவராசா அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து செயல்களையும் ஆற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் சைவநெறிக்கூடம் தனது நன்றியையும் இணக்க – இசைவினையும் தெரிவித்துக்கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதின் மனைவி சித்தி ஹஸ்மா அலி 100வது வயதில் காலமானார்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான டாக்டர் சித்தி...

போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘குறைபாட்டுப் புள்ளி’ முறை ஒக்டோபரில் ஆரம்பம்!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘குறைபாட்டுப் புள்ளி’ (Demerit Points) முறையை நடைமுறைப்படுத்தும் ஆறு...

ஆசிய தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்று கம்பஹா சிறுவன் ஃபஹத் நவாஸ் சாதனை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ‘6 வது ஆசிய உள்ளக...

அனோஜன் விவகாரம்; பொதுமன்னிப்பு வழங்க தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு...