உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

Date:

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிஹே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இலகு ரக வாகனங்களின் விலை குறைந்தது 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு தற்போதைய சந்தை நிலைமை சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், வாகனங்களை முன்பதிவு செய்ய இது ஏற்ற காலமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தை விலைகள் மேலும் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் பெரும்பாலான வர்த்தகர்கள் தற்போது வாகனங்களை நஷ்டத்திற்கே விற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தை நிலவரத்தைப் பொறுத்து வாகனங்களின் விலை குறையும் போக்கு தொடரக்கூடும் எனத் தெரிவித்த அவர், சந்தை நிலைபெற்ற பின்னர் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படும் டொயோட்டா யாரிஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசல், சுஸுகி வேகன் ஆர், டைகாட்சு மீரா மற்றும் சுஸுகி வேன் உள்ளிட்ட பல வாகன மொடல்களின் விலைகள் 4 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி...

சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: அரசாங்கம் உடனடியாக தலையிட சாணக்கியன் எம்.பி அவசர கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் சிவராசா...

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை  29...

திலித் ஜயவீரவின் ரிட் மனு தொடர்பான உத்தரவு இம்மாதம் 30ஆம் திகதி

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள...