“அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்” (අම්බුළුවාව – පර ආධිපත්යය පැරදවූ ආත්මාධිපත්යය) எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கொழும்பு மகாவலி கேந்திர மையத்தில் (Mahaweli Centre) பி.ப. 2.45 மணிக்கு நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நூலாசிரியர் தரிந்து ஜயவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் பொதுச் சொத்துக்களைத் தமது பரம்பரைச் சொத்தாக மாற்றியமைத்தல், சட்ட திட்டங்களைப் பொருட்படுத்தாமல் இயங்கிய அரசியல் முகாம்கள் மற்றும் அதற்கு எதிராக நின்ற அரசு அதிகாரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல சம்பவங்களை வெளிக்கொண்டுவரும் வகையில் இந்நூல் வெளியீடப்படவுள்ளது.
சேவைக்காகத் தொடர்ந்தும் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்நூல், நாட்டின் அனைத்து நேர்மையான அரச அதிகாரிகளுக்கும் கௌரவத்துடன் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
