நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

Date:

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் அமைந்துள்ள பாடசாலைகளுக்காக 4,570 ஸ்மார்ட் போர்ட்கள் (Smart Boards) இறக்குமதி செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்னவினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (22) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்ட்கள் விநியோகிக்கப்படும் விவரங்கள் குறித்துப் பிரதமர் மேலும் விளக்கமளிக்கையில்:

2024ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெறப்பட்ட 1,000 ஸ்மார்ட் போர்ட்கள், 1,000 பாடசாலைகளுக்கு இதுவரை முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

2025-2026ஆம் ஆண்டிற்கான சீன உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 900 ஸ்மார்ட் போர்ட்களில், 500 ஸ்மார்ட் போர்ட்கள் ஏற்கனவே பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சீன அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவக் குழுவினால் அவற்றை வகுப்பறைகளில் நிறுவும் (Installation) பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் செயலணிக்குழுவின் வழிகாட்டலின் கீழும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழும் மாகாண மட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 2,670 ஸ்மார்ட் போர்ட்களை விநியோகிக்கும் மற்றும் நிறுவும் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாண மட்டத்தில் 2,670 ஸ்மார்ட் போர்ட்கள் பின்வருமாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன:

  1. வடமேல் மாகாணம்: 524

  2. மேல் மாகாணம்: 481

  3. கிழக்கு மாகாணம்: 371

  4. ஊவா மாகாணம்: 363

  5. தென் மாகாணம்: 311

  6. வடமத்திய மாகாணம்: 200

  7. மத்திய மாகாணம்: 170

  8. சப்ரகமுவ மாகாணம்: 150

  9. வட மாகாணம்: 100

பாடசாலை வகுப்பறைகளை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கி, நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதே இந்த அனைத்து திட்டங்களினதும் பிரதான நோக்கமாகும் எனப் பிரதமர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...

கூடுதல் சீட் பெல்ட்களைப் பொருத்திக்கொள்ள அனுமதி: புதிய விதிமுறை குறித்து போக்குவரத்து அமைச்சர் விளக்கம்.

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ஆசனப்பட்டை (Seat Belt) சட்டத்தின் கீழ், ஐந்து பேரடங்கிய...