நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory Lake) நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, அதன் மதகு இன்று (24) திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் நானுஓயா ஓடையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
கிரகரி வாவியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தமையால், வாவியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அதன் மதகு திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை அறிவித்துள்ளது.
வாவியின் நீர்மட்டம் உயர்வதுடன் அப்பகுதியில் பலத்த காற்று வீசும் வளிமண்டல நிலை நிலவுவதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக கிரகரி வாவியில் நடமாடும் படகுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நானுஓயா ஓடை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் பயணிகளை விழிப்புடன் இருக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
