இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர் பொத்துவிலில் அமைந்துள்ள AK/GMM பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது, பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் தேவைகளை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள், கணினிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணத் தொகுதிகளை அவர் வழங்கி வைத்தார்.
மேலும், கல்வி அதிகாரமளித்தல் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பாகிஸ்தான் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், அவர் அங்குள்ள உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

