பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

Date:

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத் என்பவரும் இச்சம்பவம் குறித்து அறிந்ததும் வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், ஏற்பட்ட சேதங்களை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலையில் இருந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இன்று (26) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...

சாதாரண தர மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள்...