போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘குறைபாட்டுப் புள்ளி’ முறை ஒக்டோபரில் ஆரம்பம்!

Date:

போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘குறைபாட்டுப் புள்ளி’ (Demerit Points) முறையை நடைமுறைப்படுத்தும் ஆறு மாத முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) காலை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு (2027) மார்ச் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

வாகன சாரதிகளுக்கு இரண்டு வருட காலத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகள் வழங்கப்படும்.

சாரதிகள் மேற்கொள்ளும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்ப அந்தப் புள்ளிகளில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும்.

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கான தற்போதைய இணையவழி கட்டண முறைகளை மேலும் விரிவுபடுத்தி, முழுமையான டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அனோஜன் சிவராசா அவர்களின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சைவநெறிக்கூடம் விரைந்த வேண்டுகோள்

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான திரு....

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதின் மனைவி சித்தி ஹஸ்மா அலி 100வது வயதில் காலமானார்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான டாக்டர் சித்தி...

ஆசிய தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்று கம்பஹா சிறுவன் ஃபஹத் நவாஸ் சாதனை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ‘6 வது ஆசிய உள்ளக...

அனோஜன் விவகாரம்; பொதுமன்னிப்பு வழங்க தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு...