அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இடம்பெற்றது.
இதனால் பொல்துவ சந்திக்கு அண்மையில் வாகன நெரிசல் ஏற்ப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பொல்துவ சந்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுமென வெலிக்கடை பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அமைதியான மற்றும் சட்டப்படியான முறையில் போராட்டத்தைத் தொடருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், போராட்டக்காரர்கள் தற்போது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
