27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

Date:

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுக் மண்டபத்தில் 27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 10 நாள் கண்காட்சி, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 04 வரை தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறவுள்ளது.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, இவ்வாண்டு சுமார் 70 முன்னணி உள்ளூர் வெளியீட்டாளர்களும் 32 சர்வதேச வெளியீட்டாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

வருகை தருபவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலான பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் புத்தகங்களைக் சிறப்புத் தள்ளுபடிகளுடன் கொள்முதல் செய்ய முடியும்.

மேலும், நிகழ்வின் போது புத்தக வெளியீடுகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகள் மற்றும் பிற இலக்கியச் செயல்பாடுகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இம்முறை இணையவழி மூலமாகவும் அனுமதிச் சீட்டுகளைப் (Online Ticketing) பெற்றுக்கொள்ள முடிவதுடன், பண்டாரநாயக்க மண்டபத்தின் நுழைவாயில்களில் உள்ள பிரத்யேகக் கவுண்டர்களில் QR குறியீட்டைப் பயன்படுத்தி விரைவாகச் செல்ல முடியும்.

இதனிடையே, கண்காட்சி வளாகத்திற்குள் பாலித்தீன் பொருட்களைக் கொண்டு வர வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் வருகையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைக்...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்துக்கள் முடக்கம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட சந்தேகநபருக்குச் சொந்தமான, போதைப்பொருள் வர்த்தகத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் மழை!

மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது...