கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில் “முப்பெரும் விழா – 2026” வரும் செப்டம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
- மவ்லிதுன் நபி (ஸல்) மஜ்லிஸ். இது மர்ஹூம் மௌலவீ Y.L.M. புகாரி ஆலிம்ஸாஹிப் (பஹ்ஜி, பாகவீ) நினைவரங்கமாக நடைபெறும்.
- 2025 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா. இது மர்ஹூம் M.R. முஹம்மத் (அரபாசிரியர்) நினைவரங்கமாக இடம்பெறும்.
- மௌலவி அல்ஹாஜ் M.N.M. இஜ்லான் (காஸிமி) எழுதிய “ஹுப்புர்-ரசூல்” நூல் வெளியீட்டு விழா. இது மர்ஹூம் மௌலவீ அல்ஹாஜ் M. நயீம் ஆலிம்ஸாஹிப் நினைவரங்கமாக நடைபெறவுள்ளது.
நூல் ஆசிரியரின் உரையினைத் தொடர்ந்து, கஹட்டோவிட்ட MLSC / MEPS அமைப்பின் தலைவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (SLBC) முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் M.Z. அகமத் முனவ்வர் (J.P.) நன்றியுரை ஆற்றுவார்.

