சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் ஆரம்பமான பாரிய எதிர்ப்பு பேரணியொன்று தலைநகர் இஸ்லாபாத் நோக்கி செல்வதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேரணியில் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். பாகிஜ்தான் தெஹ்ரிக் – ஈ – இன்சாப் கட்சிக் கொடியை ஏந்தியவாறு அவர்கள் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
73 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல் நிலை குறித்தும் அண்மைக்காலமாக பல செய்திகள் வெளிவந்தன.
அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லையென அவரது ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
