உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தம்மை கைது செய்வதை டுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் மற்றும் பலர் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், தற்போது அவர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
