சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால் ரியாத் நகருக்கு மேற்கொள்ளப்படவிருந்த விமானச் சேவைகள் நாளை (10) வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்று கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிப் புறப்படவிருந்த UL265 விமானமும், நாளை (10) ரியாத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கவிருந்த UL266 விமானமும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மொராக்கோ மற்றும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 28 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
