சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!

Date:

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

44 எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் சபாநாயகருக்கு எதிராக சுமார் 50 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில், சபாநாயகரின் தவறான நடத்தைகள், பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை, நிதி முறைகேடுகள், சுயநலன் சார்ந்த முரண்பாடுகள் (Conflicts of interest) மற்றும் நாடாளுமன்ற வழிமுறைகளை மீறியமை உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடாத்துவதில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகவும் ஜனநாயகத்திற்குப் புறம்பாகவும் செயல்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்கட்சியினர், அவர் உடனடியாகத் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது செய்யப்படுவதைத் தடுக்க விடுத்த மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய மேன்முறையீடு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், பயங்கரவாதத்...

மனித உரிமைகள் பாதுகாப்பு விருது 2026: சிறையில் இருக்கும் மனித உரிமை ஆர்வலர் உமர் காலித்திற்கு சர்வதேச விருது!

அயர்லாந்தைச் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஃபிரண்ட் லைன் டிஃபென்டர்ஸ்' (Front Line...

கொழும்பு – ரியாத் விமானச் சேவைகள் இடைநிறுத்தம்!

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால்...

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைக்...