சிறுவர்களின் குரலுக்கும் கனவுகளுக்கும் மதிப்பளிக்கும் நாட்டை கட்டியெழுப்புவோம்; ஜனாதிபதியின் சிறுவர்தின வாழ்த்துச் செய்தி!

Date:

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் இதனைக் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பெறுமதியான பொக்கிஷம். அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, முறையான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும்.

சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை நாளைய நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றது.

சிறுவர்களுக்காக நாம் கட்டியெழுப்பும் நாடானது, நாளைய தினம் அவர்களிடம் கையளிக்க இருக்கும் நாடு மட்டுமன்றி, இன்று அவர்களின் கனவுகளுக்கு இடமளிக்கும், அவர்களின் குரலை செவிமடுக்கும் மற்றும் அவர்களின் திறமைகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் நாடாகும்.

சிறுவர்களின் நலன்களை உறுதி செய்வதற்காக, அவர்களுக்குக் கல்விக்கான சம வாய்ப்பு, வழிகாட்டல், சமூகப் பாதுகாப்பு, விளையாட்டு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த விடயங்களில் வாய்ப்புகளை வழங்குதல், முறையான போஷாக்கு, சுகாதார சேவை வசதிகள், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் சிறுவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

சாதி, மதம், பொருளாதார நிலை, புவியியல் பின்னணி அல்லது வேறு எந்தவொரு காரணமும் எந்தவொரு சிறுவரின் கல்விக்கும் அல்லது சீரான வளர்ச்சிக்கும் தடையாக இருக்கக்கூடாது.

ஒவ்வொரு பிள்ளையும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனது கனவுகளை அடைந்து, தான் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கு சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

அதற்காக, இந்நாட்டின் கல்வியை ஒரு புதிய மாற்றத்திற்கு உட்படுத்தி, பெற்றோருக்குச் சுமையாகவும் பிள்ளைகளுக்குத் துன்பமாகவும் இல்லாத, நவீன உலகிற்குப் பொருத்தமான திறன் அடிப்படையிலான கல்வி முறைக்கான மறுசீரமைப்புச் செயற்பாட்டை நாம் ஏற்கனவே தொடங்கியுள்ளோம் என்றும் நிலையற்ற பொருளாதாரத்தின் பாதிப்புக்களற்ற, பாதுகாப்பான மற்றும் அழகான சிறுவர் பருவத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக, நாம் தற்போது நாட்டின் பொருளாதாரத்தைச் சரியான மற்றும் நிலையான திசையை நோக்கி கொண்டு செல்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை நிறைவு செய்து இலங்கை இராணுவ அணி நாடு திரும்பியது!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய ஆயுதப்படைகளுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு பயங்கரவாத...

மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

10 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் மலையக மார்க்கத்தில் ரயில்...

பல பகுதிகளில் இடியுடன் மழை!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது...

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...