புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நடந்த ‘Open Day 2026’!

Date:

புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘Open Day 2026’ வழிகாட்டல் மற்றும் கண்காட்சி நிகழ்வானது கடந்த சனி (03) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (04) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்க விழாவானது கடந்த சனிக்கிழமை புத்தளம் நகர சபை முதல்வர் ரின்சாத் அஹமத் மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பைசால் ஆகியோரின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற புத்தளம் ஆசிரியர் மைய முகாமையாளர் M.H.M. நவாஸ், ஆனமடுவ ஆசிரியர் மைய முகாமையாளர் R.A.D. சிறியகாந்தி, புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின் அதிபர் I.A. நஜீம், ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் A.A.M. ஆஸாம், மன்னார் – முசலி பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் M.N.M. ராசிஃப், தொழில் வழிகாட்டல் ஆலோசகர் M.R.M. ஷவ்வாவ் ஆகியோருடன் புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், பட்டதாரிகள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் போது சமூக அறிவியல் (BA in Social Science), தகவல் தொழில்நுட்பம் (BSc in IT), மென்பொருள் பொறியியல் (Bachelor of Software Engineering – Hons), ஆரம்பக் கல்வி (BEd in Primary Education), தமிழ் மற்றும் தமிழ் மொழி கற்பித்தல் (BA in Tamil and Tamil Language Teaching) உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் தொடர்பான ஆலோசனைகளும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் சேவை (தரம் II, வகுப்பு III) திறந்த போட்டிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களில், அகில இலங்கை ரீதியில் 41-ஆம் இடத்தையும், புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுத் தேர்ச்சியடைந்த ஒரேயொரு விண்ணப்பதாரியான இலங்கை திறந்த பல்கலைக்கழகப் பட்டதாரி திரு. M.N.M. ராசிஃப் அவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இளங்கலை பட்டதாரிகள் சார்பில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவர் தற்போது மன்னார் – முசலி பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளராகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகள்

"கல்வி என்பது நீங்கள் உலகத்தை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்"...

அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

நாட்டின் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எவ்வித பரவலான பற்றாக்குறையும் நிலவவில்லை என...

இலங்கை பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது

தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு...

கொழும்புவில் முதல் இந்தியா-இலங்கை சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

கொழும்புவில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான முதலாவது சைபர் பாதுகாப்பு...