போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்துக்கள் முடக்கம்!

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட சந்தேகநபருக்குச் சொந்தமான, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் உழைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமான சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தி தனது மகன், தந்தை மற்றும் நெருங்கிய உறவினர் ஒருவரின் பெயரில் சொத்துகளை வாங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மத்திய குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.

இதற்கமைய, பின்வரும் சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன:

பொரலஸ்கமுவ – தெஹிவளை வீதியில் அமைந்துள்ள 3.5 கோடி ரூபா பெறுமதியான உடற்பயிற்சி கூடம் (Gym).

தம்புள்ளை – தித்தவெல்கொல்ல பகுதியில் 3.5 கோடி ரூபா பெறுமதியான நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு.

யக்கல பகுதியில் அமைந்துள்ள சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வீடு.

இந்தச் சொத்து முடக்க உத்தரவானது 14 நாட்களுக்குச் செயற்பாட்டில் இருக்கும் எனப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கொழும்பு – ரியாத் விமானச் சேவைகள் இடைநிறுத்தம்!

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால்...

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைக்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் மழை!

மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது...