இலங்கையின் வரலாற்று பெருமை: ‘இலங்கை முஸ்லிம்களின் தடம்’ நூல் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியீடு!
இலங்கையின் பல்லின, பல்கலாச்சார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிதலால் வளர்க்கப்பட்ட வளமான வரலாற்றில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பைப் பெருமையுடன் எடுத்துரைக்கும் ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ (‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’) எனும் நூல் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ரவூப் செய்ன் (Dr. Rauf Zein) அவர்களால் எழுதப்பட்ட இந்நூலை, ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜெயசிங்க சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
நூலாசிரியரைச் சந்தித்துப் கலந்துரையாட விரும்புவோர், இன்று (02) மாலை 7:00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்று வரும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி வளாகத்திற்கு வருகை தரலாம்.
அரங்கு – A (Hall – A), கண்காட்சி அரங்கு எண்கள்: 79 மற்றும் 80 (இஸ்லாமிக் புக் ஹவுஸ் – Islamic Book House)

