அஸ்வெசும முதியோர் உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில்!

Date:

2026 செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை இன்று (01) சம்பந்தப்பட்ட பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது.

முதியோர் தினத்திலேயே இம்முறை அவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பது சிறப்பம்சமாகும்.

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 616,755 முதியோர்களுக்காக 3,083.755 மில்லியன் ரூபாய் ஒது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 79,063 முதியோர்களுக்காக 395.315 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரு கட்டங்களின் கீழ் 695,818 முதியோர்களுக்கு 3,479.07 மில்லியன் ரூபாய் செலுத்தப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்று (01) முதல் தமது முதியோர் உதவித்தொகையை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிறுவர்களின் குரலுக்கும் கனவுகளுக்கும் மதிப்பளிக்கும் நாட்டை கட்டியெழுப்புவோம்; ஜனாதிபதியின் சிறுவர்தின வாழ்த்துச் செய்தி!

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மீண்டும் மழை

இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...

வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசி நாள்...

சவூதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வணிக ரீதியான விமானம்,...