இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை; விசேட வைத்திய நிபுணர்!

Date:

நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மனநல வைத்தியர்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது, மனநல வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக விசேட மனநல வைத்தியர் பேராசிரியர் சதுரி சுரவீர சுட்டிக்காட்டினார்.

“மனநல வைத்தியர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்டளவு குறைபாடு காணப்படுகிறது. ஏனெனில் இலங்கையிலுள்ள மனநல வைத்தியர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளில் எந்நேரமும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

மேலும் இங்கு வழங்கப்படும் பயிற்சியும் பெரிதும் மதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தச் சிக்கல் தொடர்ச்சியாக நிலவுகிறது. தற்போது சுமார் 100 முதல் 120 வரையிலான விசேட மனநல வைத்தியர்கள் உள்ளனர்.

அவர்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கிளினிக் மற்றும் தேசிய மனநல நிறுவனத்தின் கிளினிக் ஆகிய இரண்டிலும், ஒரு காலை நேர கிளினிக்கிற்கு மட்டும் சுமார் 150 நோயாளர்கள் வருகை தருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் ஆடை விவகாரம்: அரச சுற்றுநிருபத்தின்படியே நடவடிக்கை என பணிப்பாளர் விளக்கம்

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை உதவியாளர் ஒருவர்...

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) புதிய சட்ட வரைவு: தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போகும் அரசு: மத மற்றும் சிவில் அமைப்புகளுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்!

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் (NGO Secretariat) பணிப்பாளர் நாயகம் சந்திரரத்னே விதானகே அவர்களுடன்...

தடுப்புக் காவல் இடமாக மாறும் CCIB

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை ஒரு...

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக...