கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீண்டும் திறக்கும் உத்தேசம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுத் தகவல்!

Date:

கச்சத்தீவு மற்றும் அது தொடர்பான மீன்பிடி உரிமைகள் குறித்து இலங்கை – இந்தியா இடையே 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீண்டும் திறக்கும் உத்தேசம் இந்திய அரசுக்கு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன், இந்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் (Attorney General) ஆர். வெங்கடரமணி வாதிடுகையில்:

தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கவலைகள் ராஜதந்திர வழிகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறோ அல்லது அதற்குப் பணியுமாறோ இலங்கையை இந்தியா கட்டாயப்படுத்த முடியாது.

இந்தியப் பகுதியில் மீன் வளம் குறைந்துவிட்டதே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்குக் காரணம். எல்லை தாண்டுவதைத் தவிர்க்க மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

1974-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தையும், 1976-ஆம் ஆண்டு இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தையும் எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போதே இந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மனுதாரர் ஏ.கே.செல்வராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “1974 ஒப்பந்தம் என்பது இந்திய நிலப்பரப்பை வேறு ஒரு நாட்டிற்குத் தாரை வார்ப்பதற்குச் சமம். எனவே, இந்திய அரசியல் சாசனத்தின் அட்டவணை 1-இல் திருத்தம் செய்திருக்க வேண்டும்” என வாதிட்டார்.

2008-ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள இம்மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இந்த அமர்வில் இறுதித் தீர்ப்பு எதையும் வழங்கவில்லை. வழக்கு விசாரணை தொடர்ந்து நிலுவையில் வைக்கப்பட்டு, அடுத்த விசாரணை 2027 பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மூன்று ஆண்டு கால இஸ்ரேலிய இனப்படுகொலைப் போர் காசாவை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது?

இஸ்ரேலின் போர் காசாவின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொதுச்...

‘சிரிலிய சவிய’ விசாரணை தொடர்பில் முன்னாள் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

முன்னாள் முதன்மை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் , தேசிய சேமிப்பு...

ஷிரந்தி ராஜபக்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம்...