களுத்துறை நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் ஆடை விவகாரம்: அரச சுற்றுநிருபத்தின்படியே நடவடிக்கை என பணிப்பாளர் விளக்கம்

Date:

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை உதவியாளர் ஒருவர் ஹிஜாப் அணிந்து பணிக்கு சமூகமளிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து ‘Newsnow’ இன்று (08) காலை அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மதுபாஷினி கருணாரத்னவிடம் வினவியது.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியசாலையின் பணிப்பாளர், தாம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைவாகவே செயற்படுவதாகத் தெரிவித்தார்.

அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ சீருடைக்கு புறம்பாக எவ்வித மேலதிக ஆடைகளையும் அணிவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் சீருடைக்கான கொடுப்பனவை வழங்குவது, அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும் என்பதற்காகவே ஆகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இன்று சீருடைக்கு புறம்பாக ஏதேனும் மேலதிக ஆடைக்கு அனுமதி அளித்தால், நாளை ஏனைய அதிகாரிகளும் வெவ்வேறு மேலதிக ஆடைகளை அணிவதற்கு அனுமதி கோரக்கூடும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 9 வருடங்களுக்கும் மேலாக சுகாதார சேவை உதவியாளராக ஹிஜாப் அணிந்து கடமையாற்றிய இந்த உத்தியோகத்தருக்கு அங்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத நிலையில், களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த பின்னரே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று ‘Newsnow’ வினவியது.

அதற்கு பதிலளித்த வைத்தியர் மதுபாஷினி கருணாரத்ன, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் கடமையாற்றிய போதிலும், தாம் இங்கு வைத்தியசாலை பணிப்பாளர் என்ற ரீதியில் சுற்றுநிருபத்திற்கு அமைவாகவே சீருடையை அணியுமாறு அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகக் கூறினார்.

இருப்பினும், குறித்த உத்தியோகத்தர் தற்போதும் அவ்வைத்தியசாலையிலேயே தொடர்ந்து கடமையாற்றி வருவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) புதிய சட்ட வரைவு: தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போகும் அரசு: மத மற்றும் சிவில் அமைப்புகளுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்!

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் (NGO Secretariat) பணிப்பாளர் நாயகம் சந்திரரத்னே விதானகே அவர்களுடன்...

தடுப்புக் காவல் இடமாக மாறும் CCIB

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை ஒரு...

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக...

களுத்துறையில் 8 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை நகரை அண்மித்த சில பகுதிகளில் இன்றைய தினம் 8 மணித்தியாலங்களுக்கு...