கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

Date:

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மனு தொடர்பான சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஒன்லைன் உடனடி கடன் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடுமையான திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் காரணமாக...

அஸ்வெசும முதியோர் உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில்!

2026 செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை இன்று (01) சம்பந்தப்பட்ட பயனாளிகளின்...

சிறுவர்களின் குரலுக்கும் கனவுகளுக்கும் மதிப்பளிக்கும் நாட்டை கட்டியெழுப்புவோம்; ஜனாதிபதியின் சிறுவர்தின வாழ்த்துச் செய்தி!

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மீண்டும் மழை

இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...