சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

Date:

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைக் காலத்திற்கேற்ப மறுஆய்வு செய்து புதுப்பிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட தீர்மானம், முப்பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே எட்டப்பட்டுள்ளது.

தற்போதைய மத, கலாச்சார, சட்ட, நிர்வாக மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப சிறைச்சாலை அமைப்பின் செயல்திறன், நல்லாட்சி, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதே இக்குழுவை நியமிப்பதற்கான முக்கிய நோக்கமாகும்.

இக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள்:

  • பிரின்ஸ் சேனாதீர – புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர்

  • பியுமந்தி பீரிஸ் – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர்

  • வசந்த ஆரியரத்ன – பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர்

  • ஆர்.எம்.ஜீ. சேனாரத்ன – பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம்

  • ஏ.சீ. கஜநாயக்க – சிறைச்சாலைகள் திணைக்களம் ஆணையாளர்

சிறைச்சாலை அமைப்பில் கலாச்சார விழுமியங்களைப் பேணுதல், பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தற்காலச் சூழலுக்குப் பொருத்தமான அவசியமான திருத்தங்களை அடையாளம் கண்டு உரிய பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்துக்கள் முடக்கம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட சந்தேகநபருக்குச் சொந்தமான, போதைப்பொருள் வர்த்தகத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் மழை!

மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது...

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை; விசேட வைத்திய நிபுணர்!

நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல...