தடுப்புக் காவல் இடமாக மாறும் CCIB

Date:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை ஒரு தடுப்புக்காவல் இடமாக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகம் தற்போது கொழும்பு 05 இல் உள்ள தொழிலாளர் செயலகக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. கடுமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் காணப்படுகிறது.

மேலும், இப்பணியகத்தை ஒரு தடுப்புக்காவல் இடமாக வர்த்தமானியில் வெளியிட்டதன் ஊடாக அதன் புலனாய்வு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும். இதற்கமைய குற்றவியல் விசாரணைகள் மிகவும் செயற்திறனுடன் முன்னெடுக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தடுப்புக்காவலின் போது சந்தேக நபர்களின் சட்ட உரிமைகள் அதனுடன் தொடர்புடைய சட்ட நடைமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்படுவது கட்டாயமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக...

களுத்துறையில் 8 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை நகரை அண்மித்த சில பகுதிகளில் இன்றைய தினம் 8 மணித்தியாலங்களுக்கு...

அனோஜன் வழக்கில் சிறப்பு சட்டத்தரணிகள் குழு பேச்சுவார்த்தை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வது...

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, இலஞ்சம்...