மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்கான அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் இடத்திற்கிடம் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என மேலும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்று தென்கிழக்கு திசையிலிருந்து அல்லது குறிப்பிட்ட திசையின்றி வீசக்கூடும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ வரை இருக்கக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகள் சாதாரணமான நிலையில் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அத்தகைய கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன் (மணிக்கு 60-70 கி.மீ வரை), அத்தகைய சந்தர்ப்பங்களில் கடற்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாற்றமடையலாம்.
