நாளை முதல் TIN இலக்கம் கட்டாயம்
நவம்பர் முதலாம் திகதி முதல் தேசிய வருமான வரிச் சட்டத்திற்கமைய குறிப்பிட்ட சில விடயங்களை மேற்கொள்ளும் போது செல்லுபடியாகும் டின் இலக்கச் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு கட்டாயமென தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றை ஆரம்பித்தல், கட்டிட நிர்மானத்திற்கு அனுமதியை பெறுதல், வாகன பதிவுகள், மோட்டார் வாகன பதிவுகளை புதுப்பித்தல், காணி உரித்தினை பதிவு செய்தல், வியாபாரத்தை பதிவு செய்தல், இலங்கையிலுள்ள கூட்டுறவு நிவனமொன்றிற்கு பங்குகளை பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட நிதி சார்ந்த செயற்பாடுகளின் போது டின் இலக்கம் கட்டாயமான ஒன்றாக பின்பற்றப்படுமென வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள நபர்கள் இதுவரை டின் இலக்கமொன்றை பெறாவிட்டால் அதனை உடனடியாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.