வடமத்திய மாகாண பாடசாலை அதிபர்களுக்கான தேசிய ஷூரா சபையின் திறன் விருத்தி நிகழ்ச்சி

Date:

வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சியை தேசிய ஷூரா  செப்டம்பர் 30 ஆம் திகதி அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது.

கல்வி அமைச்சின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய விடயங்களை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பாடசாலை நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

பாடசாலை அடிப்படையிலான ஆசிரியர் தொழில்சார் மேம்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்துதல், பாடசாலை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தில் ஏற்படும் முரண்பாடுகளை திறம்பட நிர்வகித்து தீர்ப்பதற்கான உத்திகள்,நேர்மறையான பாடசாலைச் சூழலை உருவாக்குவதில் அதிபரின் பங்கு, அத்துடன் உடல் ஆரோக்கியம், மனநலம் மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பான பல்துறை அணுகுமுறை ஆகிய முக்கிய விடயங்கள் இந்நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, வடமத்திய மாகாணக் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான அஷ்-ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் இஸ்லாமிய நோக்கில் ஆசிரியம் என்ற தலைப்பிலும், மாஹோ வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷைக் ஜின்னாஹ் இஸ்லாமியப் பார்வையில் பாடசாலை முகாமைத்துவ உத்திகள் என்ற தலைப்பிலும் அக்கரைப்பற்று ஆசிரியர் தொழில்சார் மேம்பாட்டு நிலைய முகாமையாளர் திரு. எம்.ஏ.எம். தாஜஹான் அவர்கள் அதிபர் மற்றும் முகாமைத்துவக் குழுவுக்கான வழிகாட்டல் ஆலோசனை  சார்பான திறன்கள் என்ற தலைப்பிலும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் மேஜர் என்.டி.நஸுமுதீன் அவர்கள் கல்வி அபிவிருத்தியும் அது சம்பந்தமான பிரச்சினைகளும் என்ற தலைப்பிலும் விஷேட உரைகளை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் தேசிய ஷூரா கவுன்சிலின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான அஷ்-ஷெய்க் ஏ.எம்.ஆஸாத், நிர்வாக அதிகாரி சட்டத்தரணி ஏ.ஜே.எம்.அர்ஷத் மற்றும் இக்கிரிக்கொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.மிஸ்கீன் விதான ஆகியோர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக ஈட்டப்பட்ட 44.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை...

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...