Thursday, November 5, 2026

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் தோல்வி: ‘ஷரியா பயமுறுத்தலை’ நிராகரித்து மக்கள் அளித்த தீர்ப்பு!

1 min read · 11 reads
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott) உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்த ‘ஷரியா சட்ட அச்சறுத்தலுக்கு’ எதிராக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“மாதக்கணக்கில் ‘ஷரியா சட்டம்’தான் டெக்சாஸ், மிச்சிகன் மற்றும் அமெரிக்காவிற்குப் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று நம்மிடம் கூறப்பட்டது.
ஆளுநர் கிரெக் அபோட் தனது தேர்தல் பிரச்சாரத்தையே இதன் அடிப்படையில் நடத்தினார்” என்று பிரபல இஸ்லாமிய அறிஞர் யாசிர் காதி பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: “வாக்காளர்களின் முன்னுரிமைகள் வேறுவிதமாக இருந்துள்ளன.
செயற்கையாக உருவாக்கப்பட்ட அச்சத்தை விடவும் சுகாதாரப் பாதுகாப்பு (Healthcare), எரிபொருள் விலை உயர்வு மற்றும் மனிதநேயமற்ற இனப்படுகொலைகள் குறித்த கவலைகளே வாக்காளர்களுக்கு முக்கியமாக இருந்துள்ளன.
அச்சத்தைப் பரப்புவது தலை தலைமைத்துவத்திற்கு மாற்று ஆகாது என்பதையும், மதச் சுதந்திரம் என்பது அனைத்து அமெரிக்கர்களுக்கும் உரியது என்பதையும் இந்நிகழ்வு நினைவூட்டட்டும். வெறுப்பைப் பரப்பியவர்களுக்கு விடை கொடுப்போம்! எதிர்காலம் அனைவருக்கும் சிறந்ததாகவும் வெளிச்சமானதாகவும் அமையட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2026 இடைக்காலத் தேர்தலில் மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தல் அமைந்திருப்பதை இந்த சமூக ஊடகப் பதிவுகள் உணர்த்துகின்றன.