Monday, November 23, 2026

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் ‘குற்றவாளிகள் அல்ல’ என மறுப்பு!

1 min read
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தமக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து, யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் “குற்றவாளிகள் அல்ல” என அறிவித்துள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை திறந்த நீதிமன்றத்தில் இரு பிரதிவாதிகளுக்கும் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளை வாசித்துக் கேட்ட இரு பிரதிவாதிகளும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என மறுத்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10-ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

2006-ஆம் ஆண்டில், உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத நிலையிலும் யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவில் உள்ள ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் (Royal Naval Training College) பயிற்சி பெறுவதற்காக அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் புரிந்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.