Tuesday, November 3, 2026

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘Odyssey of Achievers 2026’ பிரம்மாண்ட விருது விழா!

2 min read · 16 reads
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த சாதனையாளர் விருது வழங்கும் விழாவான ‘Odyssey of Achievers 2026’ கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க டவர் ஹால் (Tower Hall) கேட்போர்கூடத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர்  திருமதி M. H. மும்தாஜ் பேகம் (SLEAS) அவர்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவிகளின் கல்வி மற்றும் தொழில்முறை சாதனைகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையையும் கௌரவிக்கும் விதமாக அமைந்தது.
இந்நிகழ்வில் நாட்டின் முன்னணி முக்கியஸ்தர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்: முதன்மை விருந்தினராக மேல் மாகாண ஆளுநர் கௌரவ ஹனீஃப் யூசுஃப் (Hon. Haneef Yusoof) சிறப்பு விருந்தினர்களாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி I. D. D. C. இதமல்கொட கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர்  திரு. H. A. K. U. I. ஹெட்டியாரச்சி,  பேராசிரியர்கள்: கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் பரீனா ரூஸைக் (Prof. Fareena Ruzaik)
இலங்கை திறந்த பல்கலைக்கழகக் கல்விச் சமூகவியல் பேராசிரியர் J. D. கரீம்தீன் (Prof. J. D. Careemdeen)
மேலும், கொழும்பு வலயக் கல்வி அலுவலக சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் வளர்ச்சிக்கும் வழிகாட்டலுக்கும் உறுதுணையாக இருந்த விருந்தினர்களுக்கும் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்களுக்கும் சிறப்பு நினைவண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கடந்த கல்வி ஆண்டுகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எட்டிய பிரம்மாண்ட சாதனைகள் விழா மேடையில் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன:
  •  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2025): சிறந்த புள்ளிகளைப் பெற்ற 9 மாணவிகள்.
  • க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2021–2025): உயர் சாதனைகளைப் படைத்த 140 மாணவிகள்.
  • க.பொ.த உயர்தரப் பரீட்சை (2021–2025): பல்கலைக் கழக நுழைவு மற்றும் உயர் சாதனை எட்டிய 103 மாணவிகள்.
சிறந்த கற்பித்தல் செயல்திறனுக்காக 77 ஆசிரியர்களும், முன்மாதிரியான வருகைப் பதிவிற்காக 2 ஆசிரியர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 சிறப்புரையாற்றிய மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், “உண்மையான கல்வி என்பது வெறும் பரீட்சைப் புள்ளிகளுடன் முடிந்துவிடுவதில்லை; அது நற்பண்பு, தலைமைத்துவம், கருணை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை உருவாக்குவதாகும்” எனக் குறிப்பிட்டார்.