Tuesday, November 3, 2026

யோஷிதவின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் விடுவிப்பு – கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

1 min read · 11 reads
Image ref 89074928. Copyright Shutterstock No reproduction without permission. See www.shutterstock.com/license for more information.
பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனான யோஷித ராஜபக்‌ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் (Daisy Forest) ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து டெய்சி ஃபாரஸ்டை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான டெய்சி ஃபாரஸ்ட், வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் அளவிலான உடல் மற்றும் மன நிலையில் இல்லை என நீதிமன்றத்தில் சாட்சியங்களும் மருத்துவ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இவற்றை விரிவாகப் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, டெய்சி ஃபாரஸ்டை வழக்கிலிருந்து விடுவித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.