கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

Date:

கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் திக்வெல்லை, பொல்கஹமுல்ல தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் பாடசாலை போக்குவரத்து பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஹம்பாந்தோட்டையிலிருந்து அம்பலாந்தோட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததுடன், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த விபத்தில் ஏற்பட்ட காயங்கள் அல்லது சேதங்கள் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...