நவம்பர் மாதம் முதல் TIN இலக்கத்தை முன்வைப்பது கட்டாயம்

Date:

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது வரி செலுத்துவதை உறுதிப்படுத்தும் இலக்கமான TIN இலக்கத்தை முன்வைப்பது கட்டாயமென தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வங்கி அல்லது நிறுவனமொன்றில் கணக்கொன்றை ஆரம்பித்தல், கட்டிட நிர்மாணப் பணியொன்றிற்கு அனுமதிப் பெறுதல், மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்தல் மற்றும் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் போது செல்லுபடியாகும் TIN இலக்கத்தை வழங்க வேண்டும்.

அத்துடன் காணி அல்லது காணியொன்றின் உரித்தினை பதிவு செய்தல், வியாபாரமொன்றை பதிவு செய்தல், இலங்கை கூட்டுத்தாபன நிறுவனமொன்றின் பங்குகளை கைமாற்றுதல் மற்றும் கடன் அட்டை பெற்றுக்கொள்ளும் போதும் TIN இலக்கத்தை முன்வைப்பது கட்டாயமென தேசிய வருமான வரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை TIN இலக்கமொன்றை பெறாத நபர்கள் திணைக்களத்தின் ஈ-சேவை ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சாதாரண தர மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள்...

நாட்டின் பல இடங்களில் இன்று மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய...

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...