2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளன.
மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களில் தங்களது திருத்தப்பட்ட முடிவுகளைப் பார்வையிட முடியும்.
மேலதிக தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தையும், 011 278 4208, 011 278 4537, 011 278 5922 ஆகிய நேரடி இலக்கங்களையும் தொடர்புகொள்ளலாம்.
