ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

Date:

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உத்தரவு ஒன்றைக் கோரியுள்ளார்.

குறிப்பிட்ட உத்தரவைப் பெறுவதற்காகத் சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

அவருக்குப் பதிலாக முன்னலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, உடல்நலக்குறைவு காரணமாக தேரர் ஓய்வெடுத்து வருவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அத்துடன், சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனுவை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைப்பதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறும் அவர் கோரினார்.

எனினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இது ஒரு குற்றவியல் வழக்கு தொடர்பான விவகாரம் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.

குறித்த மனுவை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்க அவகாசம் கோரி ஞானசார தேரரின் சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, நீதிமன்றம் விசாரணையைச் சிறிது நேரம் ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசி நாள்...

சவூதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வணிக ரீதியான விமானம்,...

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...