இரத்தினபுரி, கொலொன்ன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக, பல பகுதிகளுக்கு இன்று (30) 13 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை குறித்த பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாகத் தடைப்படும் என சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
மடுவன்வெல (Maduwanwela)
கரஹகயாய (Karagahayaya)
மகாயாய (Mahayaya)
கேல்ல (Keella)
அலுபோத (Aluboda)
வெல்கெட்டிய (Welketiya)
ஜதுர (Jadura)
நீர் விநியோகம் தடைப்படும் குறித்த நேரத்தில் பாவனைக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், அந்த நீரை மிகவும் அளவோடு பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், இந்த நீர்வெட்டு காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
