ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

Date:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (05) ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தண்டனையைச் செயல்படுத்துவது தொடர்பாக அவரை கைது செய்வதற்கான திறந்த பிடியாணை ஒன்று முன்னதாகவே பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியைக் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஆக்ஸ்போர்டுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பிய முஸ்லிம் பெண்மணி

ஃபாஸ் (Fes) என்பது வட ஆப்பிரிக்காவின் முஸ்லிம் பெரும்பான்மை நாடான மொராக்கோவின்...

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணையின்...

அனோஜனின் மேன்முறையீட்டுக்காக 5 பேர் கொண்ட குழு சவூதி பயணம்!

இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு...