அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை

Date:

இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அனோஜனுக்கு எதிரான குற்றச்சாட்டானது முற்றாக கருத்து வெளியிடும் உரிமையுடன் தொர்புடையதாக இருப்பதால் அவர் உடனடியாக நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டுமென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொஹமது நபி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் கருத்தினை சமூக ஊடகத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் கைதான சிவராசா அனோஜனுக்கு அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

வெறுமனே தமது கருத்தினை வெளிப்படுத்திய காரணத்திற்காக எந்தவொரு நபரையும் சிறைத்தண்டனைக்கு உட்படுத்த கூடாதெனவும், மரணதண்டனை போன்ற பாரிய தண்டனைக்கு உட்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை அனோஜன் தொடர்பில் ஆராய்வதற்கான சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் இன்றைய தினம் அந்நாட்டின் தமாம் சிறைச்சாலைக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது செய்யப்படுவதைத் தடுக்க விடுத்த மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய மேன்முறையீடு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், பயங்கரவாதத்...

மனித உரிமைகள் பாதுகாப்பு விருது 2026: சிறையில் இருக்கும் மனித உரிமை ஆர்வலர் உமர் காலித்திற்கு சர்வதேச விருது!

அயர்லாந்தைச் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஃபிரண்ட் லைன் டிஃபென்டர்ஸ்' (Front Line...

கொழும்பு – ரியாத் விமானச் சேவைகள் இடைநிறுத்தம்!

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால்...