கொழும்பு – ரியாத் விமானச் சேவைகள் இடைநிறுத்தம்!

Date:

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால் ரியாத் நகருக்கு மேற்கொள்ளப்படவிருந்த விமானச் சேவைகள் நாளை (10) வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிப் புறப்படவிருந்த UL265 விமானமும், நாளை (10) ரியாத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கவிருந்த UL266 விமானமும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மொராக்கோ மற்றும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 28 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைக்...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்துக்கள் முடக்கம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட சந்தேகநபருக்குச் சொந்தமான, போதைப்பொருள் வர்த்தகத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் மழை!

மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது...