4000 வருட பழமையான இலங்கை- இஸ்ரேல் உறவை கட்டியெழுப்ப நட்புறவு சங்கம் உதயம்!

Date:

75 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கின்ற இலங்கை- இஸ்ரேலுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்பும் வகையில் உருவாக்கப்பட்ட இலங்கை- இஸ்ரேல் நட்புறவு சங்கத்தின் முதலாவது பொதுக்கூட்டம் கடந்த 14 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.

நட்புறவு சங்கத்தின் தலைவர்  சானுகா இலங்க சேகர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேனபதியே ஆனந்த நாகிமி தேரர் அவர்கள் பிரதான உரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள், வேடுவர் சமூகத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான மோசஸ் சாலமன் காலத்திலிருந்தான 3000-4000 வருட பழைமை வாய்ந்த உறவுகள் பற்றி இந்நிகழ்வில் விபரிக்கப்பட்டதோடு இனிவரும் காலங்களில் கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை பலப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

 

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...